Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி எரித்து கொலை….. கணவனுக்கு ஆயுள் தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

கோவையில் மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் நாகப்பதேவர்  தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அவ்வப்போது ஆத்திரத்தில் தண்டபாணி லட்சுமியை  அடிப்பது வழக்கம். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஏற்பட்ட சண்டை முற்றி ஆத்திரத்தில் அருகில் இருந்த மண்ணெண்ணையை லட்சுமி மீது ஊற்றி தீயை பற்ற வைத்து எரித்துக் கொன்றார்.

இதில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு கோவை நான்காவது சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் கொலைக் குற்றவாளியான தண்டபாணிக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Categories

Tech |