Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு….. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தேலி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு முந்தைய அதிமுக அரசு அனுமதி வழங்காததால் திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது . தற்போது திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பின்னர் முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழாய் மூலமாக  விநியோகிக்கப்படும் எரிவாயுவின் விலை குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |