Categories
சினிமா

நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் அதிரடி நீக்கம்…. புதிய பரபரப்பு….!!!!

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து பாக்கியராஜ் மற்றும் ஏ.எல்.உதயா ஆகியோர் நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த பாக்கியராஜ்,புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க விதியின் படி உறுப்பினருக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக இயக்குநர் கே.பாக்யராஜ்,ஏ.எல்.உதயா இருவரையும் 6 மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் சினிமா வட்டாரத்தில் சிறியபரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |