அடுத்த 50 வருடங்களில் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டை மூடப்படும் என அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது.வானிலை மாற்றம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களால் ஒவ்வொரு வருடமும் பூமியின் தெற்கு பகுதியில் உள்ள ஓசோனில் துளை உருவாகி வருவதாக ஆய்வாளர்கள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
கடந்த 1980 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் சரிவு 50 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.இந்த நிலை இப்படியே நீடித்தால் 2070 ஆம் ஆண்டில் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டை மூடப்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.