சீனா-இலங்கை நட்புறவு சங்கம் சார்பில் சீன தேசிய தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களித்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்தனர். ஆனால் இதனை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் இதன் பின்னணியில் சில அரசியல் தலைவர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியாது. இதுகுறித்து டெய்லி மிரர் என்ற செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் போராட்டக்காரர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்தது . அந்த கும்பல் சுப்ரீம் கோர்ட்டையும் கைப்பற்ற முயன்றதாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் சீனா-இலங்கை நட்புறவு சங்கம் சார்பில் சீன தேசிய கொண்டாட்டம் கொழும்புவில் நடைபெற்றது. இதில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. எங்கள் நாட்டிற்கு சீனா ஒரு சிறந்த நண்பன். ஏனென்றால் ஒரு நண்பனாக மகிழ்ச்சியான நேரங்களிலும், துன்ப நேரங்களிலும் எங்களுடன் இருக்கிறது.
மேலும் நாங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள போது கோடிக்கணக்கில் நிதி உதவி வழங்கியுள்ளது. இந்நிலையில் அங்கு பல்லாயிரம் கோடி முதலீடுகளையும் மேற்கொண்டு வருகிறது எனக் கூறினார். இதனையடுத்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மிகப்பெரிய கல் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக பனை மேம்பாட்டு வாரிய தலைவர் கிரிஷாந்தா பதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் பானை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து உள்ளூர் நிறுவனம் ஒன்று 45 கோடி முதலீட்டில் தொடங்கியுள்ள இந்த தொழிற்சாலை இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படும் எனவும், அப்போது அது உலகிலேயே மிகப்பெரிய கல் தொழிற்சாலையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.