Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நார் தொழிற்சாலையில்….. விபத்து….. தண்ணி ஊற்றியதால்…. மளமளவென பரவிய தீ… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!

திண்டுக்கல் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நேற்றைய தினம் மதியம் சரியாக ஒரு மணி அளவில் நார் கழிவுகளில் தீப்பிடித்து தீ தொழிற்சாலை முழுவதும் பரவ ஆரம்பித்தது.

இதையடுத்து தொழிலாளர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி நார் பண்டலில்  பிடித்து பின் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. பின் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

இச்சம்பவத்தில் நல்லவேளையாக எந்த காயமும் யாருக்கும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விசாரிக்கையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Categories

Tech |