Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1…. “அப்பவே சோலி முடிஞ்சுட்டு” மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் தற்போது கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ்வான விமர்சனங்களையே குவித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார் பார்த்திபன், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை கூறிவரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தற்போது நெகட்டிவ் விமர்சனத்தை கூறியுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பொன்னியின் செல்வன் படம் குறித்து வீடியோவில் கூறியிருப்பதாவது, கதையில் எந்த ஒரு கதாபாத்திரமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அழுத்தமாக இல்லை. இந்த டீமில் ஒரே ஒரு புத்திசாலி என்றால் அது வைரமுத்து மட்டும்தான். அவரையும் படம் ஆரம்பிச்ச உடனே கழட்டி விட்டுட்டாங்க. அப்பவே படம் சோலி முடிஞ்சதுன்னு தெரிய வந்துட்டு. இந்த படத்தை எல்லோரும் பிரைட் ஆப் தமிழ் சினிமா என்று சொல்லி வரும் நிலையில், படத்தின் ஓனரமா தெலுங்கு சினிமா என்று சொல்லிவிட்டார்கள் என்று பல விஷயங்களை கூறியுள்ளார். மேலும் வேண்டுமென்றே ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருவதாக நெட்டிசன்கள் அவரை இணையத்தில் விளாசி வருகின்றனர்.

Categories

Tech |