நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும்.
இந்நிலையில் துர்கை அம்மன் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். செல்வம், கல்வி, வீரத்தின் அதிபதியான நவதுர்கையை நவராத்திரி நாட்களில் முறையாக பூஜை செய்து வழிபட்டு வந்தால், நம் வறுமை, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும். மேலும் மன தைரியம் அதிகரித்து, முக்கியமாக கல்வி திறன் மேம்படும்.