பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை முடக்கியிருக்கிறது. அந்நாட்டு அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கை படி ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை நிறுத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ட்விட்டர் நிறுவனமானது ஒரு நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதிகாரிகளின் கோரிக்கை படி குறிப்பிட்ட கணக்குகளை நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.