Categories
தேசிய செய்திகள்

“600 கிலோ வெடிப்பொருட்கள்” 6 வினாடிகள்…. இரட்டை கோபுரத்தை இடித்த நிறுவனத்தின் அடுத்த டார்கெட்….!!!!

புனேவில் அமைந்துள்ள மிகப்பெரிய பழமையான சாந்தினி செளக் பாலம் நாளை அதிகாலை 2 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்படவிருக்கிறது. மும்பையை சேர்ந்த நிறுவனம் டெல்லியில் ஏற்கனவே இரட்டை கட்டிடங்களை தகர்த்து வெற்றி கொடி நாட்டியிருக்கும் நிறுவனம்தான் நாளை இந்த பாலத்தையும் தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் கூறியது, அதிகாலை 2 மணிக்கு ஒரு சில வினாடிகளில் பாலம் தரைமட்டமாக்கப்படும். அதன் பிறகு உடனடியாக இடிபாடுகள் அகற்றும் பணி தொடங்கி விடும்.

அதனைத் தொடர்ந்து மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய சந்திப்பு சாந்தினி செளக் பகுதியாக இந்த பாலத்தை கடந்து தான் புனேயிலிருந்து செல்ல முடியும். இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் என்பது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் பழைய பாலத்தை இடித்துவிட்டு அங்கு புதிய அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனையடுத்து பழைய பாலத்தில் 1300 துறைகள் இடப்பட்டு, அதில் வெடிப் பொருட்கள் நிரப்பப்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு வெடிப்பொருள்களால் மூலம் பாலம் தகர்த்தப்படுகிறது. மேலும் இப்பகுதியில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |