Categories
உலக செய்திகள்

மிஸ்டர் புதின் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்…. நாங்கள் தொடர்ந்து தடைகளை விதிப்போம்…. அமெரிக்க ஜனாதிபதி பேட்டி….!!!!!

ரஷியாவிற்கு எதிராக தடைகளை தொடர்ந்து அமெரிக்கா விதிக்கும் என ஜனாதிபதி ஜோ  பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன்  நாட்டின் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. மேலும் அவரின் பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்துதகளால் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் பயப்பட போவதில்லை. மேலும் புதினின்  இந்த செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதை தான் காட்டுகிறது. இந்நிலையில் அண்டை நாட்டின் நிலப்பகுதியை கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது.

எனவே நாங்கள் உக்ரைன்  நாட்டிற்கு தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம். மேலும் நேட்டா பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா  எங்கள் நேட்டா நட்பு நாடுகளுடன்  இணைந்து  தயாராக உள்ளது. எனவே மிஸ்டர் புதின் நான் சொல்வதை நீங்கள் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். நான் எங்கள் நட்பு நாடுகளுக்கு நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். எனவே நாங்கள் இன்றும் புதிய தடைகளை அறிவிப்போம் என அவர் அந்த அறிக்கைகள் கூறியுள்ளார்.

Categories

Tech |