Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு உதவும் ஆதார் கார்டு…. ஆதார் அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இப்படி பல விஷயங்களில் உதவியாக இருக்கும் ஆதார் கார்டு பென்ஷன் வாங்குவோருக்கும் பெரும் உதவியாக உள்ளது. பென்ஷன் வாங்குவோர் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதற்காக நவம்பர் மாதம் இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை டிஜிட்டல் முறையிலும் சமர்ப்பிக்கலாம். அதாவது முகத்தை ஸ்கேன் செய்வது மூலமாக டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுகின்றது. இதனிடையே டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையில் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.அதனால் பென்ஷன் வாங்குவோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் ஆதார் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச மூத்த குடிமக்கள் தினமான இன்று ஆதார் அமைப்பு இந்த பதிவை வெளியிட்டுள்ளது . அதே சமயம் டிஜிட்டல் முறையில் ஆதார் கார்டை பயன்படுத்தி வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து வீட்டில் இருந்து கொண்டே வீட்டு வாசலில் பென்ஷன் வாங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |