Categories
தேசிய செய்திகள்

சாமி பேரில் குழந்தை கடத்தல் கும்பல்… வசமாக சிக்கிய 2 நபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

சத்தீஸ்கரில் பலோட் மாவட்டத்தில் குரூர் கிராமத்தின் தெருக்களில் சந்தேகத்துக்குரிய வகையில் இரண்டு பேர் காவி உடையுடன் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இது பற்றி தகவல் கிடைத்து சென்ற போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இந்து சாமியார்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அதனை நம்ப முடியாத போலீசார் அவர்களிடம் காயத்ரி மந்திரம் மற்றும் மகாமிருத்யுஞ்சய மந்திரம் ஆகியவற்றை உச்சரிக்கும் படி போலீசார் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அவர்கள் எதுவும் கூறாமல் இருந்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து விரிவான விசாரணைக்கு பிறகு, இருவரும் இந்துக்களை இல்லை என்று தெரியவந்தது. அவர்கள் இருவரும் குழந்தைகளை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் வெளியே வந்தது. இதனையடுத்து உத்தரபிரதேசத்தின் பிரதாப்கார் நகரில் நெவாடா கிராமத்தில் வசிப்பர்களான அவர்களின் ஒருவர் முசாபிர் என்பவரின் மகன் என்பதும் ஜக்குரி என்ற பெயரிலும், யாத் அலி என்ற மற்றொருவர், மாலே சஜ்ஜன் பெயரிலும் சுற்றித்திரிந்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |