நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கின்றார்.
இந்த படம் வருகிற நான்காம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் பட குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி வைத்திருக்கிறது. அதாவது படத்தை 3-டியில் மாற்ற இருக்கின்றோம் இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்ற காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என பட குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.