சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியை பாபு என்பவர் இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நேற்று பத்தனம்திட்டா கூடுதல் மாவட்டம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் ஜான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனை இதுவாகும். இருப்பினும் அவர் மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அந்த அறிக்கைகள் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 506 குற்றவியல் மிரட்டல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார்.