Categories
Tech டெக்னாலஜி

“WHATSAPP-ல் புதிய வசதி” இனி டெலிட் செய்த மெசேஜை திரும்பவும் படிக்கலாம்…. எப்படி தெரியுமா….?

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் whatsapp செயலியில் பல்வேறு விதமான மாற்றங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எமோஜிகள் அனுப்பும் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பின் குழு வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் முறையையும் அறிமுகப்படுத்தியது. அதோடு வீடியோ காலில் முகத்தை காட்ட விரும்பாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ளும் விதமாக எமோஜிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி பல்வேறு விதமான புதிய விஷயங்களை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தி வரும் மெட்டா நிறுவனம் தற்போது புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது டெலிட் செய்த மெசேஜை மீண்டும் படிக்க விரும்பினால் அதற்காக ஒரு புதிய செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது. நீங்கள் உங்கள் மொபைல் போனில் கெட் டெலிட் மெசேஜஸ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி பேக்ரவுண்டில் இயங்குவதற்கு அனுமதி கேட்கும். அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதன்பின் செயலியை ஓபன் செய்து விட்டு உங்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்து விட்டு மீண்டும் பார்த்தால் டெலிட் மெசேஜ் திரும்பவும் தெரியும்.

Categories

Tech |