இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 96 வயதாகும் அவர் இன்று காலை முதல் காய்ச்சலால் சிரமப்பட்டு வந்த அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் விரைந்து குணமடைய தமிழக அரசியல் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவருக்கு 2022ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது அவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.