மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை, அரசுப்பள்ளிகள் அழிவின் விளிம்பில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்னர்.
ஆண்டிப்பட்டி அருகே 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கராஜ புரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு ஆரம்ப பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்பது புகாராகும்.
இதனால் பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை தேனி, கம்பம் உள்ளிட்ட வெளியூர் பகுதிகளில் விடுதியுடன் செயல்பட்டுவரும் பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.
இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்பொழுது 3 மாணவர்கள் மட்டுமே பள்ளியில் படித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அல்லது இந்த அரசு ஆரம்பப்பள்ளியில் அருகே உள்ள சிங்கராஜ புரத்தில் செயல்பட்டுவரும் பள்ளியுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.