தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பட்டாசு விற்பனை தொடங்குவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை தொடங்கும் என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த வருடம் 99 சதவீதம் பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வர உள்ளதாகவும்,தீவுத்திடலில் திறக்கப்பட உள்ள 55 கடைகளிலும் சீன பட்டாசுகள் ஒருபோதும் விற்கப்படாது என்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பட்டாசுகளின் விலையில் பெரிய அளவில் உயர்வு இருக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.