இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள்.அப்படி ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களை தேவைக்கு ஏற்றவாறு பல செயல்களையும் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலைகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அதில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமம் தனது பயனர்களின் தேவை அறிந்து அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது நோட்ஸ் என்ற புதிய அம்சத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 60 எழுத்துக்களை கொண்ட தகவல்களை பதிவிட முடியும். ஒரு நேரத்தில் ஒரு நோட்ஸ் மட்டுமே பதிவிட முடியும்.பதிவு செய்த 24 மணி நேரத்தில் இந்த நோட்ஸ் தானாகவே அழிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.