தூய்மையான இந்தியா நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதல் இடத்திலும், சூரத், நபி மும்பை இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை கோவை 42வது இடத்திலும், சென்னை 44வது இடத்திலும், மதுரை 45வது இடங்களையும் பிடித்துள்ளன.அதுமட்டுமன்றி இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து நகரங்களும் 200 இடங்களுக்கு மேல் பெற்று பின்தங்கிய உள்ளன.
இருப்பினும் ஆறுதல் அளிக்கும் விதமாக கோவை மாவட்ட போத்தனூர் நகரத்திற்கு மட்டும் சிறப்பு முயற்சிகள் பிரிவில் ஒரு விருது கிடைத்துள்ளது.கடந்த 2021-ஆம் ஆண்டு பட்டியலில் சென்னை 43-வது இடத்திலும் கோவை 46-வது இடத்திலும் மதுரை 47-வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.