Categories
சினிமா

திருமணமான ஒரே மாதத்தில் இப்படியா?…. தூக்கத்தை இழந்த ரவீந்தர்….. மகாலட்சுமி செய்யும் கொடுமை….!!!

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த மாதம் திடீரென அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.அது உண்மையா என நம்புவதற்கு ரசிகர்களுக்கு பல நாட்கள் ஆகிவிட்டது.அதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் மறுபக்கம் இவர்கள் திருமணம் குறித்த விமர்சனங்களும் எழுந்தன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விமர்சனத்தை தூக்கிப்போட்டு திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் அளித்தனர்.

இதனிடையே இருவரின் புகைப்படங்களும் அவ்வபோது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் வந்தால் மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ரவீந்தர் உடலை குறைக்க கடினமான உடற்பயிற்சி செய்து வருவதாகவும் அதற்காக காலையிலேயே மகாலட்சுமி அவரை எழுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் அதிகாலையில் எழுந்து விடுவதால் ரவீந்தர் தூக்கத்தை இழந்துள்ளார். இந்த விஷயத்திற்காக தூக்கத்தை இழப்பது நல்லது தானே என ரவீந்தருக்கு பலரும் ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |