Categories
தேசிய செய்திகள்

2022 செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல்…… எவ்வளவு தெரியுமா மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ரூ.1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி மற்றும் செஸ் ரூ.10,137 கோடி ஆகும்’ என கூறப்பட்டு உள்ளது. மேலும்  7-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

Categories

Tech |