ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு 3 சமூகபாதுகாப்பு திட்டங்களை நடத்துகிறது. மேலும் அதிக சேவைகளை வழங்க முயற்சி செய்து வருவதாகவும் இபிஎப்ஓ கூறுகிறது. அத்துடன் இது பெண் ஊழியர்களுக்கு சமமான பலன்களை வழங்குகிறது. உடல் ஊன முற்றதால் தற்போதைய வேலையை விட்டு வெளியேற வேண்டிய ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகள் இருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு வசதிகளை அளிக்கும் இபிஎப்ஓ அமைப்பு, இநாமினேஷன் செய்வது அவசியமென தற்போது கூறியுள்ளது. இ-நாமினேஷனை தாக்கல் செய்வது மிக முக்கியம் என இபிஎப்ஓ கூறுகிறது. துரதிஷ்டவசமாக உறுப்பினர் மரணம் நிகழ்ந்தால் வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு பயன்களை எளிதாகப் பெற இநாமினேஷன் உதவியாக இருக்கும் என இபிஎப்ஓ கூறுகிறது. நாமினிக்கு ஆன்லைன் க்ளைம் சமர்ப்பிக்கும் வசதியையும் இந்த அமைப்பானது வழங்குகிறது
இ-நாமினேஷன் செய்வதற்குரிய செயல்முறை:
# இபிஎப்ஓ இணையதளம் > சேவைகள் (சர்வீசஸ்) > பணியாளர்களுக்கு (ஃபார் எம்ப்ளாயீஸ்) > உறுப்பினர் UAN / ஆன்லைன் சேவை (மெம்பர் யுஏஎன் / ஆன்லன் சர்வீஸ்) என்பதைக் கிளிக் செய்யவேண்டும்.
# UAN மற்றும் கடவுச் சொல் வாயிலாக லாக் இன் செய்ய வேண்டும்.
# மேனேஜ்டேப்பின் கீழுள்ள இ நாமினேஷன் என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# பின் திரையில் தோன்றும் Providedetails-ஐ சேவ் செய்து தொடர வேண்டும்.
# குடும்ப விபரங்களைப் புதுப்பிக்க ஆம் என்பதைக் கிளிக் செய்யவேண்டும்.
# குடும்ப விபரங்களைச் சேர் என்பதைக் கிளிக்செய்ய வேண்டும். ஒன்றுக்கும் அதிகமான நாமினிகளைச் சேர்த்து கொள்ளலாம்.
# மொத்த பங்குகளின் தொகையை அறிவிக்க நாமினேஷன் விபரங்கள் என்பதை கிளிக் செய்யவேண்டும். அதன்பின் சேவ் இபிஎப் நாமினேஷன் என்பதைக் கிளிக்செய்யவும்.
# அதனை தொடர்ந்து E-sign to generator OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட “OTP” ஐ சப்மிட் செய்யவேண்டும்.
# இ-நாமினேஷன் இபிஎப்ஓ-ல் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. இ நாமினேஷன் செய்தபின், கூடுதலான ஆவணங்கள் தேவை இல்லை.