Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை….. 2 நேபாள வாலிபர்கள் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!!

தொழிலதிபர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி பிஷப்கார்டன் பகுதியில் தொழிலதிபரான பன்சிதர் குப்தா(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி குப்தா பாரிமுனையில் இருக்கும் கடைக்கு சென்று விட்டார். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க காசுகள், தங்க செயின்கள், மோதிரங்கள் மற்றும் 10 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பன்சிதர் குப்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2 மாதங்களாக குப்தா வீட்டில் வேலை பார்த்த நேபாள வாலிபர் ராஜன்(20) என்பவர் 7 பேருடன் இணைந்து தங்கம் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பஜிதாமை, கைலாஷ் பகதூர் ஆகிய இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |