கொரானா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து உக்ரேன் சென்ற பேருந்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உருவான கொரானா தற்போது உலகையே மிரள வைத்துள்ளது. இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பறித்த கொடிய கொரானா வைரஸ்சால் 25000-க்கும் மேற்பட்டோர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீன மக்களை இந்த வைரஸ் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வுஹனிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கொரானா தொற்று இருப்பதாக வந்த போலி ஈமெயில் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது
சீனாவின் வுஹனாவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உக்ரைன் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவ்வாறு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். 45 உக்ரைன் நாட்டவர்களும் 27 வெளிநாட்டவர்களும் பயணித்த பேருந்தின் மீது கற்களையும், தீப்பந்தங்களை எறிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்பு படையினர் பேருந்துக்கு வழிவிட உதவினார்கள். இதை தொடர்ந்து அங்கு வந்த உக்ரைன் சுகாதாரதுறை அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுடன் தானும் தங்கபோவதாக தெரிவித்தார்.