செச்சினியா நாட்டின் குடியரசு தலைவர் அணு ஆயுதங்களை வைத்து ஒரே நாட்டிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய படையினர் தளவாட, போக்குவரத்து மையமாக பயன்படுத்திய லைமன் பகுதி, உக்ரைன் படையினரால் சுற்றி வளைத்து கைப்பற்றப்பட்டது. இது அந்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்ய நாட்டிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய நாட்டிற்கு மிக நெருங்கிய நண்பரும், அந்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் தன்னாட்சி பெற்ற செச்சினியா என்னும் பிராந்தியத்தினுடைய குடியரசு தலைவருமான ிரம்ஜான் கதிரோவ், உக்ரைன் நாட்டில் நடக்கும் தாக்குதலில் ரஷ்ய படையினர் குறைவான சக்தி கொண்ட அணு ஆயுதங்களை வைத்து தாக்குதல் மேற்கொண்டு அந்நாட்டிற்கு பதிலடி தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.