அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு கட்டாயம் 2 வருடங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். அதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரிவிடம் ஒப்பந்த கையெழுத்து வாங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த காலத்தில் மருத்துவ மாணவர்களுக்கு பணி வழங்காததோடு கல்லூரியில் சேரும்போது கொடுத்த அசல் சான்றிதழ்களையும் வழங்குவதற்கு மறுத்ததால் கோவை மருத்துவ கல்லூரியில் படித்த அருண்குமார் மற்றும் சுபாத் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துள்ளனர்.
அதில் படிப்பு முடிந்து 2 வருடங்கள் ஆகியும் தங்களுடைய சான்றிதழ்களை திரும்ப தரவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குறிப்பிட்ட காலத்தில் பணி வழங்கப் படவில்லை என்பதற்காக ஒப்பந்தத்தை மீற முடியாது என்றார். எனவே மாணவர்களிடம் இன்னும் 2 வார காலத்திற்குள் அவர்களுடைய சான்றிதழை ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை அவர்களுடைய பணிக்காலம் முடிவடையாவிட்டால் அவர்களுடைய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் மருத்துவ பணியில் பணியாற்றுவதற்கு கடிதம் அனுப்பியும் பணியில் சேராதவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.