Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செல்வ மகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு ஹேப்பி நியூஸ்…. கலெக்டர் வெளியிட்ட முக்கிய ‌ அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் செல்வமகள் சேமிப்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூபாய் 250 செலுத்தி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 250 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை செலுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின்படி 21 வருடங்களுக்கு பணத்தை தபால் கணக்கில் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் பட்சத்தில், வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. எனவே பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் உடனடியாக உங்கள் குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்கி பயன் பெறுங்கள் என்று  கலெக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |