பிரிட்டனில் புதிய மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், குயின் கான்ஸார்ட் கமீலா, வேல்ஸின் இளவரசரான வில்லியம், இளவரசி கேட் போன்றோரின் புகைப்படமானது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.
பிரிட்டன் நாட்டை 70 வருடங்கள் ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மூத்த மகனான இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். அவரின் மனைவியான கமீலா குயின் கான்ஸார்ட்டாகவும், வேல்ஸின் இளவரசராக சார்லஸின் மூத்த மகன் வில்லியமும், இளவரசியாக அவரின் மனைவி கேட்டும் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக இணைந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மகாராணியாரின் இறுதி சடங்கிற்கு முந்தைய நாள் மாலை நேரத்தில் நடந்த வரவேற்பின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.