தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் மலிவு விலையிலும் இலவசமாக உணவு தானியங்கள் ரேஷன் திட்ட மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள். ரேஷன் கடை பொருட்களை வாங்கியவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. இதனை தடுக்க தமிழக அரசு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய வகையில் தமிழக அரசு பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பொருட்களை அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை சிலர் முறைகேடாக கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை அலுவலக ஆகியோர் தொடர்ந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கள் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்களில் ஈடுபடுபவர்கள், அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட வாகனங்கள் மீது இன்றையம்மையா பண்டங்கள் சட்டம் 1955 ஆம் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு தொடர் குற்ற செயல்களை ஈடுபடும் அவர்களை தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை உள்ள வார காலத்தில் கள்ள சந்தையில் விற்ப்பதற்காக கடத்த முயன்ற ரூ.20,21,570 மதிப்புள்ள 3578 குவிண்டால் பொதுவிநியோகத்திட்ட அரசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 57 வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த குற்ற செயலில் ஈடுபட்ட 185 பேர் கைது செய்யப்பட்டத்துடன் 2 பேர் கள்ள சந்தை தடுப்பு மற்றும் இன்றைய பண்டங்கள் சட்ட 1980 இன் படி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.