தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டது. இதனால் மக்கள் ஷாப்பிங் செய்ய தொடங்கிவிட்டனர். ஆன்லைன் மூலமாகவும் ஒரு சிலர் ஷாப்பிங் செய்து வருகிறார்கள். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களிலும் தள்ளுபடி, சிறப்பு விற்பனை போன்ற சலுகைகள் தொடங்கியுள்ளது. இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் நிறுவனங்களும் ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறுகின்றன. இருப்பினும் ஒரு சிலரிடம் உடனடியாக பணம் இல்லாத காரணத்தினால் பிடித்த பொருளை வாங்க முடியாமல் போகலாம். இதற்காகவே ஐசிஐசி வந்து ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஐசிஐசிஐ வங்கியின் Pay later என்ற வசதியை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் பொருளை உடனே வாங்கிக் கொள்ளலாம். இதற்கான பணத்தை வங்கியே வழங்கும். இந்த பணத்தை 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் திருப்பி செலுத்த வேண்டும். இந்த வசதியை icici வாடிக்கையாளர்கள் 20,000 வரை பயன்படுத்தி ஷாப்பிங் செய்து கொள்ளலாம். இது ஒரு கிரெடிட் கார்டு வசதிகளை போன்றது என்று கூட கூறலாம். இந்த வட்டிக்கு கடன் ஏதும் கிடையாது. கடைசி தேதிக்குள் உங்களுடைய கணக்கிலிருந்து உரிய பணம் எடுத்துக் கொள்ளப்படும். 30 நாட்களுக்குள் பணத்தை திருப்பி செலுத்த விட்டால் அபராதம் உண்டு. ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் ஆப் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.