கும்பம் ராசி அன்பர்களே, இன்று நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். பிள்ளைகளின் நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். இடம் ,பூமி வாங்கும் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள்.
புதிய முயற்சி ஓரளவு நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் கொஞ்சம் இருக்கும். மிதமான அளவிலேயே பணம் வந்துசேரும். தியானம் , தெய்வ வழிபாடு என மனம் அமைதி பெறுவதற்கு செல்லும் . இன்று கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள், அது போதும். அது மட்டுமில்லாமல் தேவைக்காக யாரிடமும் எந்தவித பண கடன் மட்டும் வாங்க வேண்டாம் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் தடை இருந்தாலும் கொஞ்சம் கவனமாகவே படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். சக மாணவர்களிடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்வதுதான் ரொம்ப சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்