மகரம் ராசி அன்பர்களே, இன்று தேசப்பற்றும், தெய்வப் பற்றும் மேலோங்கும் நாளாகவே இருக்கும். நீண்ட நாள் எண்ணம் அனைத்தும் நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். தொழில் சம்பந்தமான எடுத்த முயற்சிகளில் வெற்றிகிட்டும். மனதில் தைரியம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ரொம்ப சிறப்பாகவே நிறைவேறும்.
நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு எல்லா விஷயத்திலும் சிறப்பாகவே இருக்கும். ஆனால் யாரிடமும் தேவைக்காக கடன் மட்டும் வாங்க வேண்டாம். இன்றைய நாள் பொறுமையாக இருங்கள், அது போதும். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
கூடுமானவரை சக மாணவர்களிடம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய தோசங்கள் அனைத்தும் நீங்க பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்