4 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள புது குறுக்குபாளையம் இரண்டாவது தெருவில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சாமிநாதனின் மனைவி அமுதாவிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அமுதா 4 லட்ச ரூபாய் பணத்தை இளங்கோவிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் இளங்கோ வந்த பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமுதா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.