தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில், மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்படு காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருது பரிசுத்தொகை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்டவருக்கான விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி காவல்துறை தலைமையகத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக உள்ள த.எ.பிரியதர்ஷினி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் கா.ஜெயமோகன், சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் ச.சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சு.சிவனேசன் ஆகியோர் காந்தியடிகள் காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விருதாளர்களுக்கு வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விருதுடன் ரூ.40 ஆயிரம் பணம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.