ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள். தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே… தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது.
இதற்கு முன்னால் இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்திய திணிப்பெல்லாம் கொசு கடித்ததை போல, அதை நசுக்குவது கண்ணுக்கு தெரியும். மூட்டை பூச்சி கடித்தது போல, அது நசுக்குவது கண்ணுக்கு தெரியும். இப்போது திணிக்கப்படுகிற இந்தி மொழி, வேறு வடிவம் கொண்டிருக்கிறது. இந்தி தெரியாதவன் மத்திய அரசின் பணிகளில் இனி இடம்பெற முடியாது என்ற ஒரு நிலைமையை மெல்ல மெல்ல திணிக்க பார்க்கிறார்கள்.
மராட்டிய மொழிக்குள் ஹிந்தி மெல்ல நுழைந்தது. இந்தி வேறு, மராட்டிய மொழி வேறு என்று ஆகாதபடி இரண்டும் உறவாடின. இப்போது பார்த்தால் மராட்டியம் தன் முகத்தையும், கலாச்சாரத்தையும் இழந்திருக்கிறது. அதனுடைய தனித்தன்மை மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கின்றது. இது தேய்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன். தேய்ந்தே போய் விட்டதற்கு சில சாட்சிகள் உண்டு.
போஜ்புரி, மகதி, மைதிலி, அவாதி, சாஸ்திரி இந்த மொழிகள் எல்லாம் வட இந்திய மொழிகள். இந்தி மொழி நம்மை என்ன செய்து விடப் போகிறது ? என்று அந்த மொழியை தங்களுக்குள் அனுமதித்த மொழிகள். காலப்போக்கில் என்ன ஆயின? மூல மொழி சிதைந்து, திரிந்து, அழிந்து கழிகிறது. அந்த இடத்தில் இந்தி வந்து உட்காருகிறது என தெரிவித்தார்.