விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தனவரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். தடைகள் விலகி செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.வீடு மாற்றங்கள் விரும்பத்தக்க விதத்தில் அமையும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தாயின் அன்பும் ஆசியும் மனதில் ஊக்கத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள்.
உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். திருமண முயற்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யுங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். ஏதேனும் பாடத்தில் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்