Categories
மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளே….!” பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள்…. ஆட்சியர் தகவல்….!!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.

மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம், செம்பனார்கோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் ரபி நெல் இரண்டாவது பருவத்திற்கு 282 வருவாய் கிராமங்களும் மூன்றாவது பருவத்திற்கு 72 வருவாய் கிராமங்களும் ரபி இதர பருவ பயிர்களுக்கு குறுவட்டார அளவில் பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டிருக்கின்றது. காப்பீடு செய்ய, வருகின்ற 2023 ஆம் வருடம் மார்ச் 15ஆம் தேதியே கடைசி நாளாகும். ஆகையால் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, வங்கிப் கணக்கு புத்தகத்தின் நகல் , ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |