Categories
மாநில செய்திகள்

ஊழியர்களே உஷாரா இருங்க…. இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு ….!!!!!

முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது  நமது முதலமைச்சர் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.  மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ள பகுதிகளில் கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இந்நிலையில் ஏராளமான ஊழியர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களை பிடிப்பது நமது தமிழக அரசின் முதன்மை நோக்கமாகும்.

மேலும்  இதுவரை 13 ஆயிரத்து 8  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 13 ஆயிரத்து 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 113 பேரும் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் அதற்கு இணையான சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நமது தமிழகத்தில் 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.86 லட்சம் டன் நெல் சேமிக்கும் கிடங்குகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மதுரை தோப்பூர் உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் திட்டம் வருகின்ற 6-ஆம்  தேதி  அறிமுகப்படுத்தப்பட உள்ளது என அவர  கூறியுள்ளார்.

Categories

Tech |