இந்தியாவில் 57 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து அவற்றை ஊக்குவிக்கும் நபர்களுடைய ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவல் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி அன்று சம்மன் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நாடு முழுவதும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஆபாச படங்களை ஊக்குவித்த 57 ஆயிரத்து 643 பேர் கணக்குகளை twitter நிறுவனம் முடக்கியுள்ளது.