சிம்மம் ராசி அன்பர்களே, இன்று கடினமான வேலைகளை கூட ரொம்ப எளிதாக முடிக்கும் நாளாகவே இருக்கும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் கூடும். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். நிலையான வருமானத்திற்கு வழி கிடைக்கும். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமங்கள் விலகி செல்லும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.
விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று பொதுநலப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சமூக அக்கறையோடு நடந்துகொள்வீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும். கல்வியில் வெற்றியும் பெறுவீர்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்