இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68 தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று டெல்லியில் திரௌபதி முர்மு தலைமையில் 68 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரௌபதி முர்முவிடமிருந்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் மண்டேலா திரைப்படத்திற்காக விருது பெற்றுக் கொண்டார். இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகான் கூறியது, இந்திய திரைப்பட விழாக்களின் இயக்கம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்படம் மேம்பாட்டு கழகம் மற்றும் இப்படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதனைதொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்றும் பிரத்தியோக திறமைசாலையில் கண்டறிந்து ஆதரிக்க வேண்டும் என்கின்ற குறிக்கோளுடன் ஒயிநாட் ஸ்டுடியோஸ் 2019 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
இந்த பயணத்தில் இயக்குனர்கள் சி.எஸ்.அமுதன், பாலாஜி மோகன், மடோன் அஸ்வின், நிஷாந்த் கலிதிண்டி ஆகியவர்கள் அறிமுகப்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். அதிலும் இந்த பிரிவில் எங்களுக்கு இவ்விருது கிடைத்தது எங்களது 12 ஆண்டுகள் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். பல்வேறு வளர்ந்து வரும் திறமைசாலிகளுடன் எங்களது எதிர்கால படங்கள் அமைய உள்ளது. இந்த விருது என்னை போல அவர்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும். இதனையடுத்து ஒரு திரைப்படம் தனது பார்வையாளர்களை அமைத்துக் கொள்ளும் என்று நான் எப்போது உறுதியாக நம்புகிறேன். கலாச்சாரம் மற்றும் மொழி தடைகளை தாண்டி உலகம் முழுவதிலும் இருந்து மண்டேலா தொடர்ந்து பெற்று வரும் ஆதரவும், எப்போதும் தரமான கதைகளும் கொண்ட படங்களை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும். மண்டோலா திரைப்படத்தை கொண்டாடிய பார்வையாளர்களுக்கு நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன். மேலும் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.