Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி சுடும் போட்டி”…. அசத்திய நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி…. விவரம் இதோ….!!!!

துப்பாக்கி சுடும் போட்டியில் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கு நேற்று துப்பாக்கி சூடும் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்துள்ளார். இந்த போட்டியில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், துணை போலிஸ் சூப்பரண்டுகள் மணிமாறன், பொன்னரசு, அசோக், சுதீர், நெல்லை மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் பிஸ்டல் ரக துப்பாக்கி சுடுதலிலும் இன்சாஸ் ரக துப்பாக்கி சுடுதலிலும் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் முதலிடமும், சங்கரன்கோவில் துணை சூப்பரண்டு சுதீர் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். இதனை அடுத்து புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக் இன்சாஸ் ரக துப்பாக்கி சுடுதலில் மூன்றாவது இடத்தையும், நெல்லை மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் துப்பாக்கி சூடுதலில் மூன்றாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். மேலும் ஒட்டுமொத்த துப்பாக்கி சூடும் போட்டியில் முதலிடத்தை நெல்லை சரக டி.ஐ.ஜி ரமேஷ் குமார் அவர்களும் இரண்டாவது இடத்தை சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் அவர்களும் மூன்றாவது இடத்தை நெல்லை மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் அவர்களும் பிடித்துள்ளனர். இதை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Categories

Tech |