Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..மரியாதை உயரும்..நல்ல தகவல்கள் வந்து சேரும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாகவே இருக்கும். நாடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். கற்றவர்களின் பாராட்டும் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய தனித்திறமையை நண்பர்கள் பாராட்டக் கூடும். முயற்சிக்கு உரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவை உருவாக்கும்.

ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவீர்கள். இன்றைய நாள் குடும்பத்திற்காக முக்கியமான பொருட்களை வாங்கக் கூடிய நாளாகவே இருக்கும். வெளியூர் பயணம் உங்களுக்கு ரொம்ப சிறப்பை கொடுக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியரின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். ஆசிரியர்களிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |