Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாக்ஸ் வின்னரை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் ரவீந்தர்”….. படத்தின் டைட்டில் இதோ…!!!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ் தற்பொழுது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் அந்த ஷோவில் செய்த விஷயங்களால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதை அடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்று டைட்டில் வென்றார்.

இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் வாய்ப்பு கொடுத்துள்ளார். தற்பொழுது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு “மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது என்டர்டைனர் திரைப்படமாக இருக்கும் என பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |