Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..இடையூறுகள் விலகி செல்லும்..ஆதாய பணவரவு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று  உதவி கிடைத்து  மகிழும் நாளாகவே இருக்கும். வருமானம் உயரும் . பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருந்த நண்பர்கள் காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகவே இருக்கும். இடையூறு விலகி நன்மை உண்டாகும். பொதுப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிணாமம் ஏற்படும் ஆதாய பணவரவு கிடைக்கும் .காணாமல் போன பொருள் கையில் வந்து சேரும்.

இன்று மனம் மகிழும் சம்பவமொன்று இல்லத்தில் நடைபெறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொண்டு இன்று மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.  இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கல்வியிலும் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |