Categories
தேசிய செய்திகள்

கேதார்நாத் கோயில் வரும் ஏப்ரலில் திறக்கப்படும்.!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் கேதார்நாத் கோயில் நடை வருகின்ற ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இதனை பார்வையிடுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.

இந்த கோவில் குளிர் காலங்களை தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டுமே  நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.அந்த வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில் 6 மாதத்திற்குப் பிறகு வருகின்ற  ஏப்ரல் மாதம் 29-ம் தேதி  கோவில் நடை திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |