உலக அளவில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளமான டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த டுவிட்டரில் சிலர் கருத்துக்களை தெரிவிப்பதோடு, வீடியோக்களையும் பதிவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதியை முதலில் ட்விட்டரில் ப்ளூ டிக் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் பதிவிடும் அனைத்து பதிவுகளையும் எடிட் செய்து கொள்ளலாம்.
இதற்கு வெளிநாடுகளில் மாதம் ரூ. 407.12 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வசதி கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், டிக் டாக் வீடியோக்கள் போன்று இனி முழு வீடியோக்களையும் ஃபுல் ஸ்கிரீனில் பார்த்துக் கொள்ள முடியும். அதோடு இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, எடிட் பட்டன் வேலை செய்கிறதா என்பது குறித்து சோதித்துப் பார்க்கப்படுகிறது. இந்த சோதனை முடிவடைந்த பிறகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது.
https://twitter.com/TwitterBlue/status/1575590534529556480?s=20&t=RJaspFbdEHNZaxtSLD-sww