Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்….!! ராமேஸ்வரம்-ஹூப்ளி ரயிலின் கால அவகாசம் நீட்டிப்பு…..!!!

சேலம் மாவட்டத்தின் வழியாக ராமேஸ்வரம்- ஹூப்ளி, ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் இயக்கப்படும் கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்(07355)  இயக்கப்படும். இது சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். பின்னர் நாமக்கல், கரூர், திருச்சி, வழியாக மறுநாள் காலை 5:15 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு வரும். இதேபோல் ஜனவரி 1-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில்(07356) இயக்கப்படும். இது இரவு 9 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு காலை 5:45 மணிக்கு சேலம் சென்றடையும். பின்னர் தர்மபுரி, ஓசூர் வழியாக இரவு 7:25 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

Categories

Tech |